July 30, 2014

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் இன்னுமொரு சிறப்பு அம்சம்

தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் இன்னுமொரு
சிறப்பு அம்சம் இது . தமிழினத்தின் வீரத்தலைவனை பெற்று எடுத்த தாயின் சாம்பலும் சிங்கள இனவெறியர்களால் பல்லாயிரம் தமிழர்கள் கொன்று ஒழிக்கப் பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணும் இங்கே உள்ளது .

கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவத்துக்காக தமிழகம் வந்த பார்வதி அம்மாவை உள்ளே அனுமதிக்க மறுத்து தீராப்பழியை தேடிக்கொண்ட அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் எவரும் இன்று பதவியில் இல்லை இதுதான் காலத்தின் தண்டனை.


பார்வதி அம்மாவின் சாம்பல் இன்று மிகவும் பக்குவமாக தமிழகத்தின் தஞ்சை மண்ணில் உலக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் செல்லும் எம்தமிழ் உறவுகள் நிச்சயம் இங்கு சென்று தமது அஞ்சலிகளை தொிவிப்பார்கள்.

No comments:

Post a Comment