July 30, 2014

நடுகல் வணக்க நிகழ்வு யேர்மனி, வூப்பெற்றால் - 2014

நடுகல் வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரை திரு. ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக்கொடியை மத்தியமாநிலம் 2ன் பொறுப்பாளர் திரு. சிறிகந்தவேல் அவர்கள் ஏற்றிவைக்க .தொடர்ந்து ஈகைச்சுடரை வடபோர்முனைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப்.கேணல் கில்மன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து எழுச்சிப் பாடல்களை இளம் கலைஞர்களான இளஞ்சூரியன் இசைக்குழுவினர் வழங்கி நிகழ்வைச் சிறப்பித்தனர். நிகழ்வினில் சிறப்புரையை திரு.ராஜன் அவர்கள் ஆற்றியிருந்தார். உரையில் தாயகத்தின் இன்றைய சூழலில் புலம்பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய கடமைகள் தொடர்பாக விளக்கியிருந்தார் . தொடர்ந்து கலைபண்பாட்டுக் கழக ஆசிரியைகளின் நெறிப்படுத்தலில் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்கள் வழங்கிய எழுச்சி நடனங்கள்  இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக தேசியக்கொடி இறக்கி வைக்கப்புட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன். நிகழ்வு நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment