July 31, 2014

வவுனியாவில் மனைவியயை வெட்டிக்கொன்று விட்டு தானும் தற்கொலை!

வவுனியா மாகாரம்பைக்குள பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வவனியா மாகாரம்பைக்குளத்தில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வே.ராமச்சந்திரன்(வயது-65), இவரது மனைவியான ரா.கிருஸ்ணவேணி(வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியையும் படுகாயப்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படுபவரான செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சடலத்தை வவுனியா காவல்துறையினர் மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment