June 9, 2014

முல்லைத்தீவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

முல்லைத்தீவின் சிலாவத்தை தெற்கு பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்களை காவல்த்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிலாவத்தை பகுதியில் வைத்து 23 வயதான யுவதியொருவர் விபச்சார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் இருந்து பல பெண்களை அழைத்து வந்து இங்கு விபச்சாரம் பெரியளவில் நடத்தப்பட்ட தகவல் அம்பலத்திற்கு வந்தது.
இவ்வாறு அழைத்து வரப்படும் பெண்களை தேடி முல்லைத்தீவு சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும் பணமுதலைகள் படையெடுத்து வருவதாகவும் அவர் வாக்குமூலமளித்தார்.
இவரது வாக்குமூலத்தை தொடர்ந்து இந்த விபச்சார செயற்பாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிலாவத்தையை சேர்ந்த கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment