April 18, 2014

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்!

துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை
11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது.

ரத்ததான முகாமினை துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், துணைத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, ஈடிஏ ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, துபை அரசின் கம்யூனிட்டி அத்தாரிட்டியின் அதிகாரிகள் முஹம்மது, பழனி பாபு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.


அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில் உயிர்காக்கும் ரத்ததானம் செய்யும் தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டினார்.


துபை அரசின் கம்யூனிட்டி அத்தாரிட்டியின் அதிகாரிகள் முஹம்மது மற்றும் பழனி பாபு ஆகியோர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டியதுடன் தொடர்ந்து ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகளுக்கு எல்லாவிதமான ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டும் என்றார்.


துபை ஹெல்த் அத்தாரிட்டி குழுவினர் மிகச் சிறப்பான முறையில் ரத்ததானம் வழங்குவோரை பரிசோதித்து ரத்தத்தை பெற்றனர். 

ரத்ததானம் செய்தவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

டிடிஎஸ் ஈவெண்ட் இயக்குநர் ஜெயந்தி மாலா சுரேஷ் ஈமான் அமைப்பின் தன்னார்வ சேவையினைப் பாராட்டினார். 

ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் தலைமையில் கீழை ஹமீது யாசின், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், ஃபைஜுர் ரஹ்மான், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், பூதமங்கலம் மைதீன் உள்ளிட்ட குழுவினர்  மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பான முறையில் ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


சிறப்பு விருந்தினர்கள் ஏற்பாட்டினை துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா சிறப்புற செய்திருந்தார்.

ஈமான் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மிகவும் ஆர்வமுடன் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்ய வந்துள்ளமைக்கு துபை ஹெல்த் அத்தாரிட்டி ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

காவ்யா, பிரசன்னா உள்ளிட்ட பள்ளி மாணவிகள் ரத்ததானம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை வைத்திருந்தனர்.

ரத்ததானம் சிறப்புற நடைபெற அஸ்கான் ஹவுஸ், அல் ரவாபி, பிளாக் துளிப் பிளவர், பிரான் ஃபுட்ஸ், ரியாமி பிரிண்டிங், பொன்னுசாமி ரெஸ்டாரெண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அணுசரனை வழங்கின.

No comments:

Post a Comment