August 6, 2016

கொக்குவெளியில் விற்ற காணிகளை மீளப் பறிக்கும் சிங்களக் குடியேற்றவாசிகள்!

வவுனியா- கொக்குவெளி பகுதியில் வசித்த சிங்கள மக்கள் சுய விரும்பின் பேரிலேயே தமிழர்களுக்கு தமது காணிகளை விற்பனை செய்த போதிலும் தற்போது அந்த காணிகளுக்கு மீண்டும் உரிமை கோருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
காணியை விற்பனை செய்த போது தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை கூட மீளவழங்காமல் அமைச்சர்களின் செல்வாக்குடன் குறித்த காணிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு சிங்கள மக்கள் முயற்சிப்பதாகவும்கூ அவர் குறிப்பிட்டார்.

 
சமாதானத்திற்கான குடியேற்ற கிராமம் என்ற பெயரில் தமிழ் பெண்களை திருமணம்செய்த சிங்கள படைவீரர்களுக்கான கிராமமொன்றை தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. கொக்குவெளியில் இவ்வாறு இராணுவத்தால் காணிகள் கையகப்படுத்தப்படுவதால், அந்த பகுதியில் தமக்கு சொந்தமான காணியை தமிழர் ஒருவர் வேறு சில தமிழர்களுக்கான குடியேற்றத்திட்டத்திற்காக வழங்கியுள்ளார். இந்த விடயம் தனிப்பட்ட நபர் சார்ந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த சம்பவத்துடன்தொடர்புபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குவெளி பகுதியிலுள்ள சிங்கள மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அச்சுறுத்தல் விடுத்து, அங்கிருந்து அவர்களை வெளியேற்ற முனைவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments:

Post a Comment