August 10, 2016

வடக்கு கிழக்கை இணைக்கும் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டியதில்லை என கருதுவதாக கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைவர் மௌவி இசட்.எம். நதீர் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் சம விகிதத்தில் வாழ்ந்து வருவதாகவும் கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தாம் உணரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு போன்றே தமிழ் மக்களுக்கும் பல்வேறு அவசரமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் காணப்படுவதனை ஒப்புக்கொள்வதாகவும்,  அதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு மாகாணங்களையும் மொழியின் அடிப்படையில் இணைப்பது பொருத்தமற்றது ஏனெனில் முஸ்லிம்களின் சமய கலாச்சார விவகாரங்கள் தனித்துவமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment