August 24, 2016

இறந்த பின்பும் கவிஞர் முத்துக்குமாருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

“நாடோடிகள்” அபிநயா, அறிமுக நடிகர் அஜய், கிஷோர், பேபி சாத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “நிசப்தம்”. இப்படத்திற்கான இறுதிப் பணிகள் முடிந்து படம் வெளியாக தயாராகிவருகிறது.


இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, “ மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே” என்ற பாடல் அனைவராலும் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலுக்காக மீண்டும் ஒரு தேசிய விருது, நா.முத்துக்குமாருக்கு கிடைக்கலாம் என்றும் படக்குழு கூறியுள்ளது.

தவிர, பெங்களூரு போலிஸ்துறை கமிஷ்னர் இப்படத்தின் கதையை கேட்டு போலிஸ் ஸ்டேஷனிலும், பெங்களூரு மத்திய சிறையிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்தாராம். மேலும் இப்படத்தின் இசை கோர்ப்பு பணிகளில் உலகில் சிறந்த இசை கலைஞர்களாகிய “செல்லோயிஸ்ட்” ஜேக் சாரக்கி, கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் செல்லோ கலைஞர் டீனா குவா, மற்றும் செர்பியன் இசை கலைஞர் விளாடிஸ்வர் நடிஷானா போன்றவரகள் பங்கேற்றுள்ளனர்.

பெங்களூரில் வாழும் தமிழ் குடும்பத்தைச் சுற்றிய கதையாக உருவாகியுள்ளது நிசப்தம். மனிதநேயம் சார்ந்த மனமாற்றம் இன்றைய சூழலில் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை படம் கூறுகிறது.



No comments:

Post a Comment