அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதானது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என்று நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்ற கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'அரசியல் கைதிகலாக 106 பேர் இன்னும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதாக பல தடவைகள் அரசாங்கம் தெரிவித்தபோதும் அது நடக்கவில்லை. இதற்கு முன்னர் சில அரசியல் கைதிகளை அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தது. என்றாலும் எஞ்சியுள்ள இவர்களின் விடுதலை குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்ன?
கொலைகளுடனும் திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு பட்டுள்ள பலர் குறிப்பிட்ட காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் விடுதலையாகியுள்ளனர். ஆனால் 7வருடங்களாக எந்த தவறும் செய்ததாக நிரூபிக்கப்படாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் குறித்து தெரிவிக்கின்றது.
ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதானது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என தெரிவித்தார்.

No comments:
Post a Comment