August 2, 2016

வவுனியா முகாமில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இராணுவத்தினர்!

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற மக்களில் பெண்களை ஆண் இராணுவத்தினரே சோதனை செய்ததாக, நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான, மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் கருத்து பதிவு செய்யப்பட்டள்ளது.


வவுனியாவில் நலன்புரி முகாம்களில் இருந்த இராணுவத்தினர், பெண்கள் நீராடும் பகுதியிலும், மலச கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற மக்களில் பெண்களை பெண் இராணுவத்தினர் சோதனையிடாது, ஆண் இராணுவமே சோதனையிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே சிறந்தது என்றும் மக்கள் கூறியுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும எனவும் வலியுறுத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்ட இளைஞர்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் முன்னின்று செயற்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

No comments:

Post a Comment