கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஏற்கனவே ஐபிசி தமிழ் செய்தியில் குறிப்பிட்டது போன்று, வைத்தியசாலையின் பின்புறமாகவுள்ள ஆனந்தபுரம், இரத்தினபுரம் கிராமங்களை ஊடறுத்து கிளிநொச்சி நகரக் குளத்தில் கலப்பதாகவும், இதனால்
மக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்குள்ளாகி சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
மக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்குள்ளாகி சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நிலைமையை நேரில் பார்வையிட்டதுடன் விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தற்காலிகமாக கொள்கலன்கள் மூலம் வெளியேற்றுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக நிலக்கீழ் நீர்ச் சுத்திகரிப்பு, மீள்சுழற்சி முறைகளைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment