August 5, 2016

ஒலுவில் கடலரிப்பு ; துறைமுக அதிகார சபை நடவடிக்கை!

ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையில் விசேட குழு ஒன்று நேரில் சென்று ஆராயவுள்ளது.


இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார சபைத்தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோரிக்கிடையே நேற்று மாலை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையின் பின்னரேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பினால் ஒலுவில் கிராமம் பாதிக்கப்படுவதையும் அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் விவரணப்படங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் ரிஷாட் துறைமுக அதிகார சபையின் தெளிவுபடுத்திய நிலையிலேயே விசேட குழு நிலமைகளை ஆராயவுள்ளது.



No comments:

Post a Comment