August 23, 2016

எனது கணவர் இருந்திருந்தால் நான் அல்லல்பட்டிருக்க மாட்டேன்! செயலணியிடம் வயோதிப பெண்மணி சாட்சியம்!

எனது கணவர், காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மரணமானார்.அவர்கூட இருந்திருந்தால், நான் இன்று நிர்கதியாகியிருக்க மாட்டேன்.


சம்பவம்நடந்து 20 வருடமானபோதும் எவரும் எம்மைப் பார்க்கவோ தீர்வை வழங்கவோ உதவவோமுன்வரவில்லை என குமாரபுரம் படுகொலையில் பாதிக்கப்பட்ட தங்கவேல் மருதாயிதெரிவித்தார்.

படுகொலை நடந்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் தீர்வு எதுவும்இல்லாமல் அல்லல்படுகிறோம். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், அண்மையில் நடந்தவழக்கிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம்.

ஆனால், எனது தந்தையையும் கணவரையும்சுட்டவர்களை நான் அடையாளம் காட்டியிருந்தேன். எமக்கு முறையானதொரு தீர்வுவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைக்கான செயலணியின் கலந்துரையாடல், மூதூர்நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இங்கு, அதிகளவிலானபாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுகருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட தங்கவேல் மருதாயி (வயது 76)குறிப்பிடுகையில்,எமது குமாரபுரம் கிராமத்தில் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,எனது குடும்பம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

தற்சமயம் எந்தவிதமானஆதாரமும் இன்றி கொட்டிலில் கிடந்து சிரமப்படுகிறேன்.எனது கணவர் தங்கவேலும் தந்தை கிண்டனன் என்பவரும் இச்சம்பவத்தில் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலமை எனக்குஏற்பட்டிருக்காதுதற்சமயம் நான் யாருமின்றித் துன்பப்படுகின்றேன். எமது கண்முன்னே நடந்த கொடூரம்பற்றி நான் அண்மையில் நடந்த வழக்கிலும் விரிவாக கூறியது மட்டுமன்றிகுற்றவாளிகளை இனம் காட்டினேன்.

என்றாலும் பயன் ஏதும் கிடைக்கவில்லை. முடிவாகஏமாற்றப்பட்டுள்ளோம். 20 வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த விதமான ஆதாரமும்இன்றி அவஸ்தைப்படுகின்றோம்.

எமது இந்தப் பாதிப்புக்கு ஒரு முடிவான பதில் தரப்பட வேண்டும். சம்பவம் நடந்தஉடனும் பின்னர் நடந்த விசாரணைகளிலும் நாம் துணிந்து நடந்தவற்றை விவரித்தும்தீர்வும் இல்லை, எமது வாழ்வும் உயரவில்லை.

எனவே, எமது உறவுகளின் படுகொலைக்குஒரு முடிவு வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment