புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோரிமுத்தெட்டுவேகம செயலணியின் உபகுழு இதனை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான அமர்வுகள் கடந்த 26ஆம் திகதி முதல் நேற்று வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் இடம்பெற்றது.
தாம் நடத்திய அமர்வுகளில் கலந்துகொண்ட பல முன்னாள் போராளிகள் மேற்படி தகவல்களை வழங்கியதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் நியாயத்தன்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
அவை குறித்து சுதந்திரமாக பகிரப்படுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் போராளிகள் வலியுறுத்தி இருப்பதாக அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment