August 10, 2016

அவுஸ்திரேலியாவில் நாசமாக்கப்படும் ஈழத்து அகதிப் பெண்கள்:அதிர்ச்சியூட்டும் தகவல்!

இதுவரையில் இந்தாண்டில் அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கூறி மொத்தமாக 1200 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார்கள்.


அவர்கள் அரசியல் தஞ்சம் கூறி வள்ளங்களில் சென்றார்கள். அவர்களை நடுக்கடலில் வைத்து தடுத்து நிறுத்தி நவுறு என்ற சிறிய தீவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

அங்கு சென்றவர்கள் பலவிதமான இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளாக்கி வருகிறார்கள் என்று அண்மையில் கசிந்த செய்திகள் தெரிவிக்கின்றன நவுறு என்பது பசுபிக் சமுத்திரத்தின் அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவு கிட்டதட்ட 21 கிலோமீற்றர் சுற்றளவு கொண்டது. அதாவது 8 மைல் சுற்றளவு. இது ஸ்ரீலங்காவில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் பார்க்க ஒரு சிறிய தீவாகும்.

இந்த தீவில் கடந்த 40 வருடமாக ‘பொஸ்பேற்அகழ்வு செய்து வந்தபடியால் அங்கே அதிகம் பேர் குடியேறவும் முடியவில்லை பயிர்களும் விளைவிக்க முடியவில்லை.

நவுறுவைச் சேர்ந்த மொத்தமாக 10,000 ஊரை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்.

அவுஸ்ரேலியா அரசாங்கம் இந்த நவுறு தீவு அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து சென்ற செப்ரம்பர் 2012ம் ஆண்டு தொடக்கம் வள்ளங்களில் அவுஸ்ரேவியாவை நோக்கி வரும்; அகதிகளை நவுறுவில் உள்ள அகதி முகாம்களுக்கு அனுப்பி வைத்து அங்கே தங்க வைக்கிறார்கள்.

இந்த அகதிமுகாம்களை பராமரிப்பதற்கு என்று அவுஸ்திரேலியா அரசாங்கம் பெரும் தொகையான பணம் நவுறு அரசுக்கு வழங்கியுள்ளது. சென்ற30 ஏப்பிரல் 2015 மாத்திரம் நவுறுவுக்கு அவுஸ்ரேலியா டொலர் 415 மில்லியன் ( அமெரிக்க டொலர் 314மில்லியன்) வழங்கி உள்ளார்கள்.

இவ்வாறு நவுறுவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றவர்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ள பிராந்திய செயலாக்க மையத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக தங்க வைத்து வந்து அகதிகளின் விபரங்களை ஆராய்வதற்கு செலவழிக்கிறார்கள். சிலரின் விபரங்கள் 3 வருடங்களாகியும் இன்னும் அந்த பிராந்திய செயலகத்தில்உள்ளவர்கள் தயாரித்து முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

அவ்வாறு விபரங்களை ஆராய்கின்ற பொழுது இலங்கை தமிழர்களும் அவர்கள் கூடார வீடுகள் தங்கியுள்ளார்கள்.

சர்வதேச மன்னிப்புச் சபை வீட்டினுள் உள்ள வெப்ப நிலை 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் (113 -122 டிகிரி பரநைட்) உஷ்ணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த ரென்டுகள் மறியல் சாலை போல தான் அமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் காவலர்கள் போய் அதனுள் இருப்பவர்களை பரிசோதிப்பார்கள். தையல் ஊசி போன்றவை மற்றும் உணவுப் பொருட்கள் வைத்திருந்தால் காவலர்கள் பறிமுதல் செய்வார்கள்.

அங்கே உள்ள அகதிகள் ஒரு ஆள் குளிப்பதற்கு 2 நிமிடம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 நிமிடத்தில் முடியாவிட்டால் அவர்கள் சம்போ போட்டு இருந்தாலும் அரைகுறை குளியலில் இருந்தாலும் காவலர்கள் வந்து அவர்களை இழுத்துக்கெண்டே வெளியில் விட்டுவிடுவார்கள்.
கழிப்பறைகள் எல்லாம மாதக்கணக்காக துப்பரவு செய்யாமல்; சுகாதார கேடாக இருப்பதாக தெரியவருகிறது

கணவன் மனைவி குடும்பத்தினர் தங்குவதற்கு பழைய கொல்கலன்களை வீடுகளாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த தீவில் அகதிகளாக சென்று வாழும் பெண்களுக்கு எந்த நேரமும் நவுறு ஆண்களின் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கிறது. மது அருந்தி விட்டு போதையில் இரவில் கொல்கலன் வீடுகளுக்கு அத்துமீறி பிரவேசித்து சென்று பெண்களை இழுத்து பலாத்காரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன இதனை நவுறு அரசாங்கமோ அவுஸ்ரேலியா அரசாங்கமோ கண்டுகொள்ளவும் இல்லை கட்டுப்படுத்த முன்வரவில்லை.

இலங்கை தமிழ் பெண்கள் தங்கள் கற்பை உயிரை கையில் பிடித்துக் கொண்டு காப்பாற்றி வருகிறார்கள் என தெரியவருகிறது.

தனி ஒரு மனிதன் அரசியல் தஞ்சம் கோருவது அவனது பிறப்புரிமை. அவுஸ்ரேலியா அரசாங்கம் அவர்கள் வள்ளத்தில் வருகிறார்கள் என்று குற்றம் சுமத்தி அரசியல் தஞ்சம் கோருவோரை துன்புறுத்துகிறார்கள் மிருகதனமாக நடத்திவருகிறார்கள்.
அவுஸ்ரேலியா வர வேண்டாம் கடத்தல் காரரின் சதியில்விழ வேண்டாம் என்று அவுஸ்ரேலியா அரசாங்கம் இலங்கையில் தீவிரமாக விளம்பரம் செய்கின்றது.

இந்த விளம்பரங்களை வீதி ஓரங்களில் உள்ள விளம்பர பலகை வைத்தும், ஊடகங்கள; மூலமாகவும் ,தொலைக்காட்சி வானொலி, பதிரிகைகள் மூலமாகவும் அவுஸ்ரேலியா அரசாங்கம் மற்றும் இங்குள்ள ஊடகங்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவுஸ்திரேலிய அரசின் இந்த நாசகார செயலை ஏனைய ஊடகங்களும் வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதே எமது கருத்து…

No comments:

Post a Comment