August 22, 2016

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் ஆரம்பம்!

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது.


இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நல்லிணக்கத்தின் அடையாளமா அத்துமீறிய புத்தர்சிலை, வெலிக்கடை, மகசின், பூஸா, தமிழ் இளைஞர்களின் குத்தகை வீடா? உள்ளிட்ட வாசகங்களை நீதிக்கான நடை பயணத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் இடம்பெறவுள்ளது.

இந்த நடைபயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி மற்றும் பொது அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காலை 8 மணிக்கு ஆணையிறவு உமையாள்புரம் இணைப்பு பாலத்திலுள்ள அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

இந்த நீதிக்கான நடைபயணம் கிளிநொச்சி பிள்ளையார் கோவிலை வந்தடையவுள்ளதுடன் கிளிநொச்சியிலுள்ள யு.என்.எச்.ஆர்.சி அலுவலகத்தில் ஐ.நா செயலாளர் மற்றும் மனித உரிமை ஆணையாளருக்கு மனுவொன்று கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை திட்டமிட்ட வகையில் மிகவும் சூசகமாக தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி இராணுவப் பபலத்துடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த நீதிக்கான நடைபயணத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி அண்மையில் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.





No comments:

Post a Comment