கூட்டு எதிரணியினர் மேற்கொண்டு வரும் பாதயாத்திரை இன்று கொழும்பு நகரைச் சென்றடையவுள்ள நிலையில் கொழும்பு நகரப்பகுதி முழுவதிலும், விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிசாருடன், விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்புப் பிரிவு, புலனாய்வு பிரிவினரும் அதிகளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழிகாட்டலின் கீழ் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பணிப்புரைகளுக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment