மட்டக்களப்பில் வெள்ளைவானில் வந்தவர்களால் நேற்று கடத்தப்பட்ட 11 வயதுச் சிறுவன், காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கற்கும் மாவடி வேம்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் விதுஷன் என்ற 11 வயதுடைய மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று விட்டு, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை வழியாக காலை 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, அந்த வீதியால் வெள்ளைவானில் வந்தவர்கள் சிறுவனை வானுக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் குறித்து, சிறுவனின் பெற்றோர்களினால் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்பின்னர், மட்டக்களப்பு - பதுளை வீதி, கரடியனாறு பகுதியிலுள்ள வீதியருகிலுள்ள காட்டோரத்தில் அழுதுகொண்டு நின்ற சிறுவனை மீட்டெடுத்தவர்கள் அருகிலுள்ள கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு மற்றும் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment