விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, முழுமையான மருத்துவ அறிக்கையை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பிடம் கேட்ட போது, அவர் அதற்கு விருப்பம் வெளியிட்டிருந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையில் இந்த விடயம் தொடர்பாக பேசிய முதலமைச்சர், அமெரிக்க தூதுவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க மருத்துவ குழுவினர் இடைக்காடு பகுதிக்கு வந்து மருத்துவ பணிகளை ஆரம்பித்த போது, புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரை, நேற்று முதலமைச்சரின் செயலாளர் ஊடாக, அமெரிக்க மருத்துவ குழுவிடம் அழைத்து சென்றதாகவும் அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்து விட்டதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்புக்கான காரணத்தை கேட்ட போது, தம்மிடம் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான வசதிகளை இல்லை என மாத்திரம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையை வடக்கு மாகாண சபை மேற்கொள்ளும். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.ம் தேவையேற்பட்டால் அதற்கு உதவ வெளிநாடுகள் தயாராக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment