August 6, 2016

யானை குட்டிக்கு கூட பெயர் வைக்க அனுமதியாத துர்பாக்கிய நிலை!

தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் இறுதியில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.


இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ச இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

தென் கொரியாவில் இயங்கும் கத்தோலிக்க மத அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் மகிந்த ராஜபக்ச தற்போது அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் தென் கொரியாவுக்கு வழங்கிய யானை அண்மையில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

பிறந்துள்ள குட்டி யானைக்கு பெயர் சூட்டும் சந்தர்ப்பத்தை தனக்கு வழங்குமாறு ராஜபக்ச, தென் கொரிய அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யானையை மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியில் வழங்கவில்லை எனவும் அது இலங்கை அரசின் சார்பில் வழங்கப்பட்டது எனவும் தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக குட்டி யானைக்கு பெயரிடும் சந்தர்ப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பெயர் சூட்டும் சந்தர்ப்பம் கிடைக்காத போதிலும் தமது அரசு வழங்கிய யானை மற்றும் குட்டி யானையை பார்வையிட செல்ல மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment