தற்போதைய ஆட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் தற்போதைய நிலைப்பாடுதான் என்ன. இவைகளுக்கான பதில்களை அல்லது தகவல்களையாவது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போதைய நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பு சீர்திருத்த வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள தமிழ் பேசும் மக்களின் பல குறைகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒரு நேர்காணல்.
பிடசன்னா சன்முகதாஸ் ஏற்படுத்திய நேர்காணலில் இரா.சம்பந்தன் பதிலளிக்கையில்,
ராஜபக்ஷவின் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் எந்த நடவடிக்கைகளும், மாற்றங்களும் விஷேடமாக கூறுமளவிற்கு இடம் பெறவில்லை.
ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் வெள்ளை வான் கலாச்சாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலை, பத்திரிகையாளர்களின் படுகொலை, நீதித்துறையின் சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளானமை, இதன் காரணமாக மக்கள் தம் சுதந்திரத்தினை உணரவில்லை.
ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் இவை மாறியுள்ளது, ஆனாலும் தற்போதும் இது குறித்து மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் தொடர்பில்?
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர், சம்பூர் மற்றும் யாழ்பாணத்தில் சில நிலங்கள் விடுவிக்கப்பட்டன இருப்பினும் சில நிலங்களை வழங்குவது தற்போதும் தாமதமாகவே நடைபெற்று வருகின்றது.
இந்த செயல்முறைகள் மெதுவாக இடம் பெறுகின்றமைக்கான காரணங்கள் ராஜபக்ஸ போன்றவர்களின் எதிர்பே.
தாங்கள் இது தொடர்பில் கூற விரும்பும் கருத்து?
நாங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன்னியில் உள்ள 30 கிராமங்களிற்கு சென்றோம், அதாவது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்காக நாங்கள் வன்னிக்கு சென்றிருந்தோம்.
ஆனால் இந்த அறிக்கையை ராஜபக்ஷவிடம் சமர்பித்த உடன் நான் பணத்திற்கு எங்கு செல்வேன்? என்ற கேள்வியையே என்னைப் அவர் பார்த்துக் கேட்டார்.
இந்திய பிரதமர் வன்னியில் வீடுகளை இழந்திருக்கும் வடக்கு மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு தாம் உதவுவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தை வெளியேற்ற நீண்ட காலம் எடுத்தமைக்கான காரணம் என்ன?
இது குறித்து எந்த முயற்சிகளையும் எடுக்க விடாமல் அரசாங்கம் எங்களை தடுத்து விட்டது.
இராணுவ வசமிருக்கும் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கபடும் எனவே தெரிவிக்கப்பட்டது.
யுத்ததின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில்?
காணாமல் போனவர்களில் அதிகமானவர்கள் இறந்திருக்கவே கூடும் ஏனெனில் அவர்கள் தற்போது எந்த தடுப்பு காவலிலும் இல்லை என இந்த வருடத்தில் ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதமர் ரணிலின் கூற்றை நான் நேரடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் காணாமல் போனவர்களில் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 20 ஆயிரம் அறிக்கைகளை தயாரித்துள்ளேன்.
இவ்வாறு காணாமல் போனவர்களில் சிலர் தற்போதும் தடுப்பு காவலில் தான் இருக்கின்றார்கள் என்பதை நான் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.
இருப்பினும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டே விரிவான அறிக்கைகள் தயாரிக்க வேண்டும்.
பயங்கரவாத சட்டம் குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?
அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருப்பதாக இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.
வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட இந்த விடயம் குறித்து எந்த தீர்மானமும் இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.
இருப்பினும் அரசாங்கம் கடுமையான சட்டம் என பயங்கரவாத தடை சட்டத்தை கருதுகின்றது எனவே இதை நீக்குவது தொடர்பில் நான் பல முறை நாடாளுமன்ற விவாதத்தின் போது வலியுறுத்தியுள்ளேன்.
இலங்கை யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படுகின்றமையும், இது தொடர்பில் சர்வதேச நீதி அமைப்பின் தலையீட்டினை அரசாங்கம் விரும்புகின்றமை பற்றியும் தாங்கள் கூறவிரும்புவது என்ன?
இலங்கை யுத்தத்தின் போது இடம் பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்த சர்வதேச நீதி அமைப்பின் தலையீட்டை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆயினும் இலங்கையில் இருக்கும் சிலர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பிலும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நாவின் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி ஆதரவளித்தமை தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இயற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. யுத்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தமை எனக்கு கவலை அளிக்கின்றது. இதற்கு காரணம் நீதித்துறை சுதந்திரம் இல்லாமையே.
இந்த பிரச்சினை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள ராஜபக்ஷ அரசாங்கம் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை ஈடுப்படச் செய்தது.
உள்நாட்டு நீதிபதிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பம் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்வது சாத்தியம் இல்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
மொழி ஒரு பிரச்சினையாக இருக்கலாம் இதற்கான தீர்வுகளை சிறந்த முறையில் பெற்று தருவது வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே முடியும்.
விடுதலை புலிகள் தரப்பில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுதந்திர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
ஒரு சுதந்திரமான விசாரணை தமிழ் சமூகத்தின் உறுப்பினர்களை வழி நடத்திச் செல்லும். தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.
யுத்தத்தின் போது புலம் பெயர்ந்த மக்கள் பற்றி?
யுத்தத்தின் போது அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தமை கவலை தரும் விடயம்.
மக்களின் விடுதலையை இலக்கு வைத்தே நாம் அனைவரும் செயற்பட்டுக் கொண்டு வருகின்றோம்.
வடக்கு கிழக்கில் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு தங்களின் அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சியின் போது எந்த மாற்றமும் நிகழவில்லை.
தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு பற்றி கூறவேண்டும்.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும், இனவாதம் இல்லாமல் சிங்களவர்களும் எங்கள் பகுதிகளில் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அதிகார பகிர்வு இருக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கைக்கு தான் ஆதரவையே அளித்திருக்கின்றேன்.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக எந்த வன்முறைகளும் இன்றி அனைத்து மக்களும் நலமாக வாழ்வதே எங்களது நோக்கம்.
தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அவர்களின் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி பாதுகாப்பு, வெளியுறவு, குடியேறுதல், குடிவரவு குடியுரிமை, தேசிய தகவல் தொடர்பு, தேசிய போக்குவரத்து, பெரும் துறைமுகங்கள், முக்கிய துறைமுகங்கள் இவை தவிர அனைத்து அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் இந்த நாளன்று செயற்படுத்தப்படுமாயின், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை உருவாக்கக் கூடும் என நான் எதிர்பார்த்து இருக்கின்றேன். என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது நேர்காணலினை நிறைவு செய்து கொண்டுள்ளார்.
இந்த நேர்காணலின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் நிஜமாக நிறைவேற்றப்படும் கருத்துகளாக அமையப்பெற்று விட்டால் தமிழ் மக்களுக்கு ஓர் விடிவாகவும், அதே சமயம் நாட்டில் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்திற்கும் நன்மை விளையும் என்பது நிச்சயமாகும்.

No comments:
Post a Comment