August 6, 2016

சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.


2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் நடந்த இறுதிகட்ட போரில் பலர் தஞ்சம் அடைந்தனர். அதில் 104 பேர் மர்மமான முறையில் இறந்ததை கண்டித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல செயலாளர் கரு.அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 200 பேரையும் பொலிசார் வானில் ஏற்றி அழைத்து சென்றனர். ஜனாதிபதி சிறீசேனாவின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்ட்து.

இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் சரண் அடைந்த ஈழத்தமிழர்களில் 104 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். ராஜபக்ச அரசுக்கும், தற்போது நடைபெறும் சிறிசேனா அரசுக்கும் வித்தியாசம் இல்லை. இருவரின் ஆட்சி முறையும் தமிழர்களுக்கு எதிராகத்தான் உள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முகாமில் இருந்த தமிழர்கள் தடுப்பூசியில் இறந்தார்களா? வி‌ஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment