புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி, நேற்று பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பிரித்தானிய நேரப்படி மதியம் 12 தொடக்கம் 4 மணி வரை இல 10, Downing Street, London, SW1A2AA என்னும் இடத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது இராணுவத்தினரிடம் முன்னாள் போராளிகள் பலர் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல போராளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர்.
இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment