வடக்கில் எப்போது குண்டு வெடிக்கும் என மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சோசலிச இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் சகோதரத்துவ தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துகொள்ளும் முகமாக 1983ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜூலை கலவரத்தினை ஏற்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சி, அபிவிருத்தி குழு யாழ்பாணத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக யாழ். பொது நூலகத்தினை எரித்தது. இந்நிலையிலேயே, மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அவருடைய ஆதரவு குழுக்கள் இனவாத கருத்துக்களை வெளியிடுகின்றது.
கடந்த 30ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கில் மாத்திரம் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். அத்துடன், 2500 மேற்பட்டவர்கள் தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களாக இருக்கின்றனர். காணமல் போன தமது உறவுகளை தேடி வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களை, சமயம், சாதி என்ற அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்பதே மேல் வர்க்கத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.
இந்நிலையிலேயே, வடக்கில் இனவாதத்தினை தூண்டி ஆட்சியினை கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முனைகிறார். இதற்கான வடக்கில் எப்போது குண்டு வெடிக்கும், இராணுவத்தினர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்படும் என மஹிந்த ராஜபக்ச ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment