தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைகள் சிங்கள மக்களுக்குத் தெரிவதில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அவற்றை மறைக்கிறார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் சிங்கள மக்களுக்கு அறிய வைப்பதன் ஊடாகவே ஆரோக்கியமான நல்லிணக்கத்தை எட்டமுடியும் என முல்லைத்தீவு பெண்கள் அமைப்பான சங்கமே அமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்த சங்கமே அமைப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்து உயிரிழந்தவர்களின் நினைவேந்தலை சுதந்திரமாக நினைவுகூருவதற்கு நல்லாட்சி அரசு அனுமதிக்கவேண்டும்.
இராணுவத்தினரின் வேலை நாட்டை பாதுகாப்பதே. அதனை விடுத்து சிவில் அமைப்புக்களில் தங்கள் அதிகாரங்களை செலுத்தகூடாது.
அதனை இராணுவம் நிறுத்தவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் இருக்கும்போது பெரும்பான்மை இனத்தவர்களின் நியமனங்கள் தவிர்க்கப்படவேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நாளை துணுக்காய் பிரதேச செயலத்திலும், எதிர்வரும் சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், 4ஆம் திகதி வெலியோயா பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment