வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தலைவர் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளினதும் அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
1983ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27ஆம் திகதி வெலிக்கடைச் சிறையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் 33வது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்படது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோநோதரலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டனர்.
அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment