ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரித்தானியாவிற்குள் குடியேறுவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்றும் அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவிலிருந்து விலகுவதற்கு முன்னதாக அங்கு வந்தடைய பெருமளவில் மக்கள் படையெடுப்பர் என்றும் நாடாளுமன்ற குழு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment