July 14, 2016

போர்க்குற்ற நீதிமன்றம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படாது – விஜயதாச ராஜபக்ச!

இலங்கையில் போர்க் குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது எனவும் நாட்டின் சுயாதீனத்தன்மை , பௌதீக ஒருமைப்பாடு , இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்காது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் போர்க் குற்ற நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ள அவர், குற்றம் சுமத்தும் தரப்பினர்களே இந்த நீதிமன்றம் எப்போது எவரால் எவ்வாறு அமைக்கப்படும் என்பதனை விளக்க வேண்டும் எனவும், அரசாங்கம் அதுபற்றி விளக்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


யார் அந்த தீர்மானத்தை மேற்கொண்டது என்பது தொடர்பில் அந்த அரசியல்வாதிகள் தெளிவுப்படுத்துமாறும் கோரியுள்ள நீதியமைச்சர் நாட்டில் யுத்த குற்றச்சாட்டு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படமாட்டாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment