July 26, 2016

இலங்கைக்கு மீண்டும் பல திருவள்ளுவர் சிலைகள்!

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மூலம் எதிர்வரும் வாரங்களில் 16 திருவள்ளுவர் சிலைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக த ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது.


இந்த 16 திருவள்ளுவர் சிலைகளையும் வட மாகாணத்தில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சாவக்கச்சேரி ஆகிய பிரதேசங்களிலும், வடமேல் மாகாணத்தில் புத்தளத்திலும், மேல் மாகாணத்தில் கொழும்பிலும், மத்தியமாகாணத்தில் மாத்தளை, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டியிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச தமிழ் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கியிருந்த திருவள்ளுவர் சிலைகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு அமையும் என சர்வதேச தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு அல்லது மட்டக்களப்பு பிரதேசங்களில் கேளிக்கை பூங்கா அமைப்பது குறித்தும் வி.ஜி.சந்தோசம் கருத்து தெரிவித்திருந்திருந்தார்

மேலும், 16 திருவள்ளுவர் சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கடந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment