July 26, 2016

மஹிந்த பானையையும் சுரண்டி, பானைக்கு வெளியிலுள்ள கரியையும் சுரண்டி விட்டுச் சென்றிருக்கின்றார்!

நாட்டில் நல்லாட்சி வந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கத்திடம் நல்ல பணம் கிடையாது. ஏனென்றால் முன்னாள் ஜனாதிபதி பானையையும் சுரண்டி பானைக்கு வெளியிலுள்ள கரியையும் சுரண்டி விட்டுச் சென்றிருக்கின்றார் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


மட்டக்களப்புநொச்சிமுனைக்கிராமத்திலுள்ளதரிசனவீதிமிகநீண்டகாலமாகப்புணரமைக்கப்படாதநிலைமையில்காணப்பட்டது.

இவ்வீதியைகிராமியபொருளாதாரஅபிவிருத்திப்பிரதியமைச்சரின்முப்பத்தேழுஇலட்சம்ரூபாநிதியொதுக்கீட்டில் 377 மீற்றர்நீளமும் 4 மீற்றர்அகலமும்கொண்டதாகபுனரமைக்கப்பட்டவீதிதிறப்புவிழாவில்கலந்துகொண்டுஉரையாற்றும்போதேஅவர்மேற்கண்டவாறுதெரிவித்தார்

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

நாம் ஒவ்வொருவரும் நாட்டில் நல்லாட்சி பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம். அது கிடைத்துள்ளது. ஆனால் அந்த நல்லாட்சியின் மூலம் மக்களுக்கு அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திட்டம் பணம் இல்லாதுள்ளது. அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி சோற்றுப்பானையையும் சுறன்டி பானைக்குள்ளிருந்த தீஞ்சோற்றையும் விட்டு வைக்காமல் பானையிலுள்ள கரியினையும் சுறண்டி விட்டுச்சென்றுள்ளார்.

அதனால் கடன் சுமையில் நாடுள்ளது. நமது நாட்டிலிருக்கின்ற ஒவ்வொரு தலைக்கும் பிறக்கவிருக்கின்ற ஒவ்வொரு குழந்தையின் பெயராலும் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அதற்கு வட்டி கட்டும் நிலைமை தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பிரதியமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜோன்பாஸ்டர் தலைமையில் இடம்பெற்ற இவ்வீதி திறப்பு விழா நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்களும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment