July 29, 2016

சர்வதேச ரீதியாக அவமானங்களை சந்திக்கும் மஹிந்த! எதிர்காலம் நல்லதாக அமையுமா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச ரீதியாக பல பின்னடைவுகளை கண்டு வருவதாக தெரிய வருகிறது.


கடந்த காலங்களில் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் உலக நாட்டுத் தலைவர்கள் அதிருப்பதி அடைந்துள்ளமையே இதற்கான பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு உயர்மட்ட அரச தலைவர்களை சந்திக்க கோரிக்கை விடுத்திருத்தார். எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதற்கான நிதியுதவியை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த விஜயத்தின் போது தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அந்த நாட்டு பிரதமரை சந்திப்பதற்காக மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையும் அந்த நாட்டினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைகளினால் ராஜபக்சர்களினால் சேகரிக்கப்பட்டுள்ள செல்வங்களை வெளியில் எடுப்பது சிக்கலாகியுள்ளது.

இதனால் கூட்டு எதிர்க்கட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள தன்னார்வர்களிடம் நிதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தென்கொரியா சென்றதன் பின்னர் அவரை வரவேற்பதற்காக அந்த நாட்டு பிரதான விகாரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மஹிந்தவின் தென் கொரிய விஜயத்திற்கு முதன்மை ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்பதனால், குறித்த விகாரையின் விஹாரதிபதியினால் அந்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment