July 29, 2016

இன்னும் திறக்கப்படாத நீதி தேவதையின் கண்கள்!

யுத்தம் முடிந்து 7 ஆண்டு கடந்த போதிலும் முடிவு இல்லயாத துயரில் வாழும் அவலம்.. உலக நாடு முழுதும் செய்த சதி எனவே சொல்ல தோணுகிறது ....இன்று வரை மனித உரிமை ஆணைக்குழு கண்களை மூடி மௌனம் சாதிக்கிறது . ..நீதி தேவதையின் கண்கள் ஏனோ ஈழ மக்களுக்கான நீதி மறைக்கப்பட்டன..


கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் உட்பட காணாமல் போன உயிர்களுக்கான நீதி இன்று வரை இருட்டறையில் மௌனம் சாதிக்கின்றன.

தமிழ் இன அழிவின் பாதிப்பு இன்றும் கொஞ்சமும் மாறாத வடுவாகவே எங்கள் மனதில் இருத்தலும் ..

உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா என்ற கேள்வியோடு பரிதவிக்கும் உறவுகள் எத்திணை...இவர்களுக்கான பதில் என்ன?

இவர்களின் வலிக்கான மருந்து என்ன ....? இவர்களுக்கு நீதி கிடைக்காதா..?

கண்ணீரோடு உறவுகளுக்காக காத்திருக்கும் இந்த அப்பாவி மக்களின் நிலையை ஏன் யாரும் கண்டுக்கொள்ளாது இருப்பது .. ஒட்டு மொத்த தமிழ் இன அழிப்பின் பங்கு எல்லோருக்கும் உண்டு என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

நம் இனத்துக்காக போராடியவர்கள் தங்கள் புனித உயிர்களை எங்கள் மண்ணுக்கு தியாகம் செய்து விட்டார்கள்.

இருப்பவர்கள் சுயநலமான வாழ்க்கைக்கு அடிமையாகி பணம் பதவி .. ஆசை மோகத்தால்.. இறந்தவர்களின் புனித ஆத்மாக்களும் . யுத்தத்தால் பாதிக்க பட்ட மக்கள் ,காணாமல் போன அப்பாவி மக்களையும் வைத்து .. அரசியல் லாபம் பெரும் கூட்டம் ஒரு பக்கம்

பணம் சம்பாதிக்கும் கூட்டம் மறுபக்கம், இருக்கும் மிச்ச மீதி இளம் சமுதாயத்தையும் அழிவு பாதையில் அழைத்து செல்லும் கூட்டம் .இப்படியே தொடரும், இந்த சதியில் அப்பாவி தமிழ் வன்னி மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்....

ஏழ்மையின் உச்சம் ... தீராத வலி கொண்ட இந்த உறவுகளின் எதிர்காலம் கேள்விக்குறியே ?

கிடைக்காத நீதிக்காக விழி மேல் விழி வைத்து காத்திருக்கும் பரிதாபம் ..... தமிழரின் கண்ணீர் துடைக்க இனி யார் முன் வருவார்கள் ?

நீதி கிடைக்காமல் பரிதவிக்கும் அப்பாவி மக்களின் நிலை ,கேள்விக்குறியே ,?

தொடரும் தமிழரின் நிலை ......

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை பயன்படுத்தி அரங்கேற்றிய தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களின் முதலாவது நிகழ்வாகக் கருதப்படும் கறுப்பு ஜூலை படுகொலைகளை தொடர்ந்து,

மே/18/ 2009 நடத்தப்பட்ட தமிழின அழிப்பு தமிழ் இனத்தையே அளித்து விட்டது ... உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்த அந்த கொடூரத்தை என்றுமே எவராலும் மறக்க முடியாது.

நீதி கேட்டு ஐநாவிடம் நம்பிக்கை கரம் ஏந்தி நின்ற போதும் 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீதி கிடைக்க வில்லை அழிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு .

இன்று வரை ... ஐநா இன்னும் என்ன ஆதாரங்களை எதிர் பார்த்து காத்து இருக்கின்றன என்று தான் கேள்வி குறி?

யாரை காப்பாத்த இந்த மௌனம் ? யாருக்காக பயப்படுகிறது ஐநா ?

படுகொலை செய்யப்பட்ட ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் வலி இன்னும் வன்னி மண்ணில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

வலி சுமந்த வன்னி மண்ணின் அப்பாவி உயிர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்க வில்லை.

காணாமல் போன உறவுகளின் விபரம் அறியாது பரிதவிக்கும் அப்பாவி மக்களின் நிலையோ இன்று மிகவும் பரிதாபம்.

இவர்களுக்கான நீதி கேள்விக்குறியாகி போன நிலையிலும் .. ஒரு துளி நம்பிக்கையை இழக்காமல் நீதி கிடைக்கும் என்று இன்று வரை போராடி தான் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் வாழ்வு முடிவத்துக்குள் நீதி கிடைக்குமா ,? காணாமல் போன உறவுகளை காண கிடைக்குமா ?

இந்த அப்பாவி முகங்களின் உறவுக்காக ஏங்கும் பரிதவிப்பை இன்றுவரை வேடிக்கை பார்க்கும் கூட்டம் நடுவில் இவர்களின் நிலை என்ன ?

No comments:

Post a Comment