இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் உட்பட்ட பல்வேறு திட்டங்களையும் வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டுடன் உறவை பலப்படுத்திக்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்தக்கருத்தை கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள, அமெரிக்க ஆய்வு நிலைக்கப்பலான நியூ ஓர்லீன்ஸை பார்வையிட இலங்கையின் கடற்படை தளபதி வந்திருந்தபோது வெளியிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று இலங்கையில் ஜனநாயக அபிவிருத்தி ஏற்பட்ட நாளில் இருந்து அமெரிக்கா, இலங்கையுடன் நல்ல உறவைக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜனநாயக ரீதியினால் பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டதாக அடுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகத்தில் மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் பணியாற்றுவதற்காக புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இராணுவத்துடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதற்கான காரணத்தையும் அமெரிக்க தூதுவர் விளக்கினார்.
ஜனநாயகத்தின் வெற்றிக்கு தொழில்முறை இராணுவம் அவசியம் என்ற அடிப்படையிலேயே இந்த நெருக்கத்தை அமெரிக்கா கொண்டிருப்பதாக அடுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேசத்துக்கு கடந்த செப்டெம்பரில் உறுதியளித்த வகையில் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கிவருகிறது என்றும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் சாதாரண மக்கள், அரசாங்கம், இராணுவம் மற்றும் அதிகாரத்துவம் என்பன முன்னோக்கி செல்லும்போதே அதன் நோக்கங்களை அடையமுடியும்.
இதற்காக அமரிக்கா மக்கள் இலங்கை மக்களுடன் இணைந்திருப்பர் என்றும் அமெரிக்கா தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment