July 28, 2016

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள மக்களிற்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலப்பரப்பினில் சுமார். 5 ஏக்கர்  நிலம் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.


கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் உள்ள தமிழ் மக்களின்  17 ஏக்கர் நிலங்கள் கடந்த 7 ஆண்டுகளாக படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.

இதன் உரிமையாளர்கள் இன்றுவரை உறவினர் மற்றும் வாடகை வீடுகளில் வாழும் நிலையில் இக் காணிகளை தம்மிடம் மீளவும் ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கையுடன் நீண்ட போராட்டங்களையும் நடாத்தினர்.

இறுதியில் இம்மாதமும் இரு முறை போராட்டம் நடாத்திய வேளையில் இவ் நிலங்களில் ஒரு பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை நம்பியே இப்பிரதேச மக்கள் தமது வாழ்விடத்தினை எதிர்பார்த்து காதிருக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த நிலத்தில் இருந்து 4 .8ஏக்கர்  நிலம்  விடுவிக்கப்படவுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள 17 ஏக்கர் காணிகளில் 27 குடும்பங்களினதும் அசர திணைக்களம் மற்றும் பொதுக் காணிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விடப்படவுள்ள நிலத்தில் மக்களின் வாழ்விடங்களில் எத்தனைபேரின் வாழ்விடம் விடப்படவுள்ளது என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகத் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment