July 28, 2016

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பேரூந்து நிலையத்தினை அழிவில் இருந்து மீட்டெடுக்க முடியுமா-பிரதேச மக்கள் கோரிக்கை!

வவுனியா மாவட்டத்தில்  ஆயிரம் மில்லியன் ரூபாவில் கட்டப்பட்ட திட்டமிடப்படாத   நெடுங்கேணி பேரூந்து  நிலையத்தினை அழிவில் இருந்து மீட்டெடுக்க முடியுமா என அதிகாரிகளிடம பிரதேச மக்கள் கோரிக்கை விடுகிக்கின்றனர்.


மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் நெடுங்கேணி பேரூந்து நிலையத்தினை புனரமைத்து தருமாறு விடப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் நகரின் வெளியே 300 மீற்றர் தொலைவில் ஆயிரம் மில்லியன் ரூபாசெலவில் 2013ம் ஆண்டு புதி ய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பேரூந்தி நிலையத்தில் 20 கடைத் தொகுதிகளும் அதற்கான உள்ளக போக்குவரத்து வசதிகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

இவ்வாறு உள்ளூர் மக்களின் கோரிக்கை ஓர் தெரிவாக இருந்தபோதும் அரசியல்வாதிகள் நகர விரிவாக்கம் எனும் பெயரில் வேறு தெரிவையும் மேற்கொண்டு பெரும் தொகைப்பணத்தில் குறித்த பேரூந்து அமைக்கப்பட்டது.

ஆனால் இன்று இப் பகுதியில் இருந்து புறப்படும் ஒரு சில பேரூந்துகளைத் தவிர இப்பேரூந்து நிலையத்தினை எட்டியும் பார்ப்பதில்லை.

இவை அனைத்திற்கும் அப்பால் இங்கு அமைக்கப்பட்ட 20 கடைகளில் 6 கடைகள் மட்டுமே இயங்குகின்ற போதும் ஏனையவை இன்றுவரை பூட்டிய நிலையிலேயே உள்ளது. போதிய மக்கள் பயன்பாடு அற்ற காரணத்தினால் குறித்த கடைகளை எடுத்து நடாத்துவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை.

ஏனைய மாவட்டங்களில் உள்ள பேரூந்து நிலையங்களில் கடைகளைப் பெறுவதற்கு அதிக போட்டி நிலவுகின்ற போதிலும் இங்கு மட்டும் இன்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் வர்த்தகர்கள் முன்வராத்து மட்டுமன்றி , இப்பகுதிக்கு வரும் பேரூந்துகளையும் இம்மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து களையாவது குறைந்த பட்சம் இப் பேரூந்து நிலையத்தினை பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் குறித்த பேரூந்து நிலையத்தின் பயனை பெற முடியும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

இவ்வாறு நீண்ட காலமாக போதிய மக்கள் பயன்பாடு அற்ற நிலையில் இப்பேரூந்து நிலையம் இருப்பது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

இப் பேரூந்து நிலையமானது கடந்த ஆட்சியின்போது கட்டப்பட்டது இச்சபைக்கு அண்மையில் நியமனம் பெற்று வந்தேன். இருப்பினும் இக் கட்டிடத்தில் தற்போது 6 கடைகள் இயங்குகின்றபோதும் ஏனையவற்றினையும் இயக்கி அதன் மூலம் மேலும் அபிவிருத்தி செய்யவே முயற்சிக்கின்றோம்.

ஏனைய கடைகளையும் பலரும் கோருகின்றபோதும் அதனை இயக்க முன்வருவது கிடையாது. அவ்வாறு இயக்காமல் இருப்பதற்கான காரணமாக அங்கு போதிய மக்கள் பயன்பாடு இல்லை.

என்ற காரணமே கூறப்படுகின்றது. இதற்காக இ.போ.சபை மற்றும் தனியார் பேரூந்துகள் அனைத்தையும் குறித்த பேரூந்து நிலையத்தினை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

இருப்பினும் குறிப்பிட்ட சில பேரூந்துகள் மட்டுமே இப் பேரூந்து நிலையத்தினைப் பயன்படுத்துகின்றனர். என்றார்

No comments:

Post a Comment