July 16, 2016

ஐ.நா தீர்மானம் இலங்கையின் இறைமையை மதிக்கும் வகையிலேயே காணப்படுகின்றது – டொம் மாலினோவ்ஸ்கீ!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாட்டின் இறைமையை மதிக்கும் வகையிலேயே காணப்படுகின்றது என ஜனநாயகம், மனிதஉரிமைகளுக்கான அமெரிக்கத் துணை ராஜங்கச் செயலாளர் டொம் மாலினோவ்ஸ்கீ தெரிவித்துள்ளார்.



கடந்த காலங்களில் இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கை வலுவிழந்த நிலைமை காணப்பட்டதாகவும் இதன் காரணமாகவே வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் என கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் மிகவும் சிக்கல் மிகுந்தவை எனவும், இது குறித்து அனைத்து தரப்புக்களுடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீதி விசாரணைப் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் நிர்ணயிக்கும் என்ற போதிலும் சர்வதேச பங்களிப்பினை உள்ளடக்குவதாக இலங்கை உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment