பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
களுதாவளையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி நிர்வாக சபை உறுப்பினர் கே.குணம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராச்சிங்கம் முன்னிலையில் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான க.கிருபானந்தசிவம் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் முன்னைய தலைவராக இருந்த எஷ்.விஐயரெட்ணம் பதவி விலகியதால் அந்த இடத்திற்கு தலைவராக அரியநேத்திரன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தின் போது சமகால அரசியல் நிலைமை தொடர்பான கருத்துரையினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் பொதுச் செயலாளருமான கி.துரைராச்சிங்கம் உரையாற்றுனார். பட்டிருப்பு தொகுதியின் கடந்தகால தேர்தல் தொடர்பான விமர்சன உரைகளை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா,பா.அரியநேத்திரன். த.கனகசபை மற்றும் பட்டிப்பளை பிரதேச கிளையின் செயலாளர் க.தியாகராசா, வெல்லாவெளி பிரதேச கிளை தலைவர் வீ.ஆர்,மகேந்திரன், துறைநீலாவணை நிர்வாக உறுப்பினர் கணேச மூர்த்தி, உட்பட பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் காலங்களில் பட்டிருப்பு தொகுதி கிராமிய இலங்கை தமிழரசுக்கட்சி கிளைகளை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது, எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி தேர்தல் ஒன்று இடம்பெறும் நிலையில் அது தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment