இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குண்டு சாந்தன் என்ற உண்மையான குற்றவாளியை சுட்டுக் கொன்றுவிட்டு, அப்பாவியான தன்னை அவருக்கு பதிலாக சிக்க வைத்துள்ளதாக, வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற இலங்கைக் குற்றவாளி குறிப்பிட்டுள்ளார்.
தான் இந்த வழக்கில் 25 வருடகாலமாக சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இலங்கைக்கே அனுப்பிவிடுமாறும், மத்திய உள்துறை அமைச்சக செயலர், மாநில அரசின் உள்துறைச் செயலர், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு சாந்தன் விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
சாந்தன் எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாட்டு வேலை வாய்ப்பினைத் தேடி தான் படகுமூலம் இந்தியாவிற்கு வந்த நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
”சி.பி.ஐ மற்றும் பயண முகவர் மற்றும் வீரப்பன் ஆகியோர் நான் கடவுச்சீட்டுடன் இந்தியா வந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பினைத் தேடியதாக நீதினமறில் அறிவித்தனர். ஆனால், 6.7.1991 அன்று என்னைக் கைது செய்த பொலீஸார், 22.7.1991 அன்று ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளி நான்தான் என அந்த வழக்குடன் என்னைத் தொடர்பு படுத்திவிட்டனர்.” என்றும் கூறினர்.
‘இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளியான குண்டு சாந்தனை, 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி, பொலீஸார் சுட்டுக் கொன்றதுடன், அந்த சாந்தனுக்குப் பதிலாக என்னை இணைத்து விட்டனர். குண்டு சாந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை, சமீபத்தில் செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன், என்னுடைய உண்மையான பெயர் சாந்தன் என்கிற சுபேந்திர ராஜா’ என்றும் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனைக் கைதிகயான தன்னை இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறும், இந்திய இலங்கை கைதிகள் பரிமற்ற ஒப்பந்தத்திற்கு அமைய, தன்னை இலங்கை அரசாங்கத்திடமே கையளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment