நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து விட்டதாகவும், இதனால் இளைஞர்களின் வாழ்க்கை அழிவடைவதாகவும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருபவர்கள் தமக்கு ஏற்ற வகையில் சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், நீதிமன்ற கட்டமைப்பு என்பன பலவீனமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் நீதிதுறையின் பலவீனத்தால் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருளின் அளவும் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் நாட்டின் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை பாழாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 'போதைப்பொருளிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 30ஆம் திகதி ராகமயில் எதிர்ப்பு பாதயாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேராயர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment