கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மற்றுமொரு மோசடிகள் குறித்த தகவலை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பேன் ஏசியா வங்கியின் தலைவர் நிமல் பெரேராவினால், நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலம் ஊடாக நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனரான ஜானகி சிறிவர்தன எனப்படும் ஜானகி வீரகொடவுக்கு இடையிலான பல தொடர்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக நிதி மோசடி தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது
ஜானகி சிறிவர்தன எனப்படும் பெண் வர்த்தகர் கடந்த ராஜபக்ச ஆட்சியுடன் மிகவும் நெருக்காக செயற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் மஹாதேவன் நிறுவனத்தின் (கிரிஷ் இலங்கை நிறுவனத்தின் தாய் நிறுவனம்) உரிமையாளர்களை இந்த நாட்டில் முதலிட்டுக்காக அழைத்து வரப்பட்டதும் இவரால் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த நாட்டில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் முதலில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றமையினால் சிறிவர்த்தன என்ற பெண் இந்திய வர்த்தகர்களுக்கு முதலில் நாமல் ராஜபக்சவை அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச ரகர் வீரர் என்பதனால் இந்த நாட்டு ரகர் விளையாட்டிற்கு அனுசரணை பெற்றுக்கொடுக்க முடியும் என சிறிவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்திய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய 70 மில்லியன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
அந்த பணம் நாமல் ராஜபக்சவினால் வழங்கப்பட்ட வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
நிமல் பெரேரா என்பவரே அந்த கணக்குகளின் உரிமையாளராகும்.
நிமல் பெரேரா மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையில் பல விசேட வர்த்தக தொடர்புகள் காணப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான பல நிறுவனங்களின் விலாசமாக அடையாளப்படுத்தப்படும் கவர்ஸ் ஸ்ட்ரீட் கட்டடம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும் இந்த நிமல் பெரேரா என்பவராகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு கிரிஷ் நிறுவனத்தின் முதலீடு தேவையாக காணப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்ச ஊடாக அதற்கு ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுகொள்வதற்கான விசேட முயற்சிகளை ஜானகி சிறிவர்தன மேற்கொண்டு வந்துள்ளார்.
எப்படியிருப்பினும் ஹம்பாந்தோட்டை சீன ஆதிக்கத்தின் கீழ் இருந்த நகரமாக காணப்பட்டுள்ளமைக்கமைய இந்த சந்தர்ப்பம் கிரிஷ் நிறுவனத்திற்கு கைநழுவி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் கற்பிட்டியவில் 30 ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 40 மில்லியன் கொடுக்கல் வாங்கல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் தலையீட்டிற்கமைய அந்த காணியை கொள்வனவு செய்யும் ஒருங்கிணைப்பிற்கு அப்போதைய சுற்றுலா சபை தலைவராக செயற்பட்ட பேராசிரியர் நாலக கொடஹேவா இதற்கு தலையிட்டுள்ளார்.
எனினும் அந்த காணி பத்திரத்தில் தீர்வு இல்லாமை மற்றும் அப்போதைய காணி அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரத்ன இந்த நாட்டு காணிகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய தடைவிதித்து சட்டம் கொண்டு வந்தமையினால் அந்த காணி தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த காணி கொடுக்கல் வாங்கல்களை ஜானகி சிறிவர்தன மற்றும் சஜின் வாஸ் குணவர்தன இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய தரகு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கற்பிட்டிய காணி கொடுக்கல் வாங்கலில் பெற்றுகொண்ட 40 மில்லியன் பணத்தை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய மீளவும் செலுத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் ஜானகி சிறிவர்தன தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலக கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ஆகியோர் மற்றும் பிரபல வர்த்தகர்கள் பலரை இலங்கை அழைத்து வருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
அதற்கமைய அம்பானி பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment