July 17, 2016

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழா[படங்கள் இணைப்பு]

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13 ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தி ஸ்ரீவாசன் அவர்களினால் 16.07.2016 அன்று வேகாவனப் பொருமாலுக்கும் பூலோக நாயகிக்கும் அபிசேகங்கள் இடம் பெற்று பூசைகள் நடை பெற்று எம் பெருமான் குதிரை வாகனத்தில் வேட்டைக்குச் சென்று தேன் வேட்டையாடி இதில் இந்த ஆண்டு பெருந்திரளான அடியார்கள் தங்கள் தேசங்களை நீங்குவதற்கு தங்கள் உடல்களில் கரிகள் பூசி வாகம் குழை அணிந்து வேடுவர்கள் போல் நேர்த்திக் கடனில் அடியார்கள் வருடந்தோறும் ஈடுபட்டு வருகின்றார்கள் அந்த வகையில் இந்த ஆண்டும் அதிகமான சிறுவர்கள் நேர்த்திக் கடனில் பங்கேற்றுள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.
இந்த ஆலயத்திற்கு இரண்டு காரணப் பெயர்களும் உண்டு தானாக தோன்றிய படியால் தான்தோன்றீஸ்வரர் ஆகவும் குரக்கன் ஒட்டு தீயிட்டு எரிக்கும் போது வேகமல் இருந்த படியால் வேகாவனப் பெருமாள் எனவும் அழைககப்படுவார். ஆந்த வகையில் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment