July 30, 2016

போராளியின் துப்பாக்கி - ‪ந‬.பிரதீப்..!

நீ நிலவோடுவிளையாடிக்கொண்டிருந்த
நாளொன்றில்த்தான்,
விடுமுறையில் வந்திருந்தேன்..!!

பாசறையை
கடக்கும்போதிருந்த சோகம்
உன்னோடு நடக்கும்போது
ஒரு குழந்தையளவிற்கு
குறைந்திருந்தது..!!
துப்பாக்கி குறித்த
உன்னுடைய கேள்விகள்
புதினமானவை..!!
அதிலொன்று,
“உன்னுடைய துப்பாக்கி
தேவையுண்டானால்
என்னையும் சுடுமா..?”
சாரா..!!
போராளியின்
துப்பாக்கி
சுடுதலை விரும்புவதில்லை
விடுதலை விரும்பிகள்
தோட்டாக்களின் முதுகில்த்தான்
உங்கள் தலைமுறைக்கான
சமாதானம் ஏற்றப்பட்டிருக்கிறது..!!
இறக்கி வைக்கத்தான்
போராடினோம்
சாரா..!!
என் செல்லக்குழந்தையே
கனவுகளைக்கிழறாதே..!!
கனவுகளில்க்கூட
நாங்கள் அனுமதிக்கப்படவில்லை
வதைமுகாம்களின்
வேலிகளைத்தாண்டுவதற்கு..!!
‪ந‬.பிரதீப்

No comments:

Post a Comment