சாம்பல்தீவினில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பினில் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிற்கு தெரிவிக்கப்போவதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனுமதி பெற்று இத்தகைய சிலைகளை அமைப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்டத்தினில் நடைபெறும் திட்டமிட்ட விகாரை அமைப்பு பணிகள் தொடர்பினில் கூட்டமைப்பு காட்டிய மௌனம் சந்தேகத்தை எழுப்பியிருந்தது.
இந்நிலையினில் இன்று ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் விகாரை அமைப்பது தொடர்பினில் சம்பந்தனிற்கு அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தனது தொகுதியினில் அமைக்கப்படும் புத்த விகாரை பற்றி ஊடகங்கள் அம்பலப்படுத்திவரும் நிலையினில் இன்னும் அது சம்பந்தனிற்கு தெரியாதுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:
Post a Comment