July 14, 2016

வவனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்!

வவுனியாவில்  இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வி்த்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.


வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை புதுமண தம்பதிகள் முன்னுதாரணமாக செய்து காட்டியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஆரோக்கியமான சம்பவங்கள் நடைபெறுமாயின், எமது சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை பெரும் ஆடம்பரமாக செய்து களியாட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடும் தமிழர்களுக்கு, வவுனியா புதுமண தம்பதியினரின் செயற்பாடு பெரும் சாட்டையடியாக இருக்கக்கூடும்.


No comments:

Post a Comment