July 29, 2016

முல்லைத்தீவு பகுதியில் சிங்கள மீனவர்கள் பிரதேசத்தினை பெற்றுத்தருமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் அப்பிரதேசத்தினை தமக்கு பெற்றுத்தருமாறு கோரி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டமுறமையுடன் தொழில் புரியும் சில தென்னிலங்கை மீனவர்களுன் மேலும் பல தென்னிலங்கை மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் அப்பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கடற்றொழில் புரியும் பிரதேசங்களில் வாடி அமைப்பதற்கான அனுமதியினை பிரதேச செயலாளர் வழங்க மறுப்பதனால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறித்த அனுமதியினை வழங்குமாறு பிரதேச செயலாளரை பணிக்குமாறு கோரியே நேற்று முன்தினம் குறித்த பிரதேசத்தில் தொழில் புரியும் தென்னிலங்கை மீனவர்கள் சிலர் ஆளுநரைச் சந்தித்தனர்.

இவ்வாறு சந்தித்த மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் அவ் அனுமதியினை வழங்காமை தொடர்பில் உடன் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு குறித்த அனுமதியினை வழங்க முடியுமா எனவும் வினாவியுள்ளார்.

இருப்பினும் பல காரணங்களை தெரிவித்த பிரதேச செயலாளர் குறிப்பிட்ட காரணங்களினால் இவர்களிற்கான அனுமதியினை சட்டமுறையில் வழங்க முடியாது . எனத்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment