July 29, 2016

பேராயர் தலைமையில் போதைப் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நாளைய தினம் போதைப் பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.


ராகம நகரில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் அனைத்து பங்குகளை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ராகம பிரதேசத்தில் உள்ள பிரதான கத்தோலிக்க பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கையில் போதைப் பொருள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமையே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திருச்சபை தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment