சர்வதேச பங்குபற்றலுடன் வடக்கில் முதலீட்டாளர்கள் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பில், விரைவில் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்.நல்லூர் உற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த உற்சவத்திற்கு வரும் புலம்பெயர் சமூகத்துடன் இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்ட வடக்கு ஆளுநர், இதன்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உப்பளம், திக்கம் வடிசாலை, சோலார் பவர் உள்ளிட்ட தொழிற்சாலைகளை பொறுப்பேற்று நடத்திச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வடக்கில் நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை வினைத்திறனுடையதாக மாற்றி, அதிக இலாபத்தை ஈட்டும் வகையில் வழிவகை செய்வதே தமது நோக்கமென வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment