தமிழர் அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சித்தலைவர்களும் சிந்தனைக்குழாமினரும் ஒருங்கிணைந்த முதலாவது கலந்துரையாடல் மிகவும் ஆக்கபூர்வமாக நடைபெற்றுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து அவர் இன்று விடுத்தள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற 'தடம்மாறுகிறதா தமிழ்தேசியம்' கருத்துறவாடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த கருத்துருவாடல் நிகழ்விற்கு எம்மால் அழைக்கப்பட்டு வருகை தந்து நிறைவு வரை பங்கேற்றிருந்த ஆயர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உட்பட அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்தாய்வாளர்கள் புத்திஜீவிகள் ஊடகத்துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தமிழர் அரசியல் வரலாற்றில் அரசியற்கட்சித்தலைவர்களும் சிந்தனைக் குழாமினரும் ஒருங்கிணைந்த முதலாவது கலந்துரையாடல் மிகவும் ஆக்கபூர்வமாக நடைபெற்றது.
கருத்தியலாளர்களால் முன்வைக்கப்பட்ட தமிழ்தேசிய நிலையியல் நடைமுறை வாதத்தை தமிழ்த்தலைமைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.
அரசியல் கட்சித்தலைவர்களின் பதிலுரைகள் ஆக்கபூர்வமாக அமையவில்லை. என்னும் குறைபாடும் எழுந்தது.
எனவே கருத்தியலாளர்களால் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படுவதுடன் அடுத்த கலந்துரையாடல் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறும் அதற்கிடையில் குழுக் கலந்துரையாடல்கள் நடாத்தப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment