July 25, 2016

மகிந்த ஆட்சியில் சிறைகைதிகளுக்கு பூனை இறைச்சி கொடுத்த கொடூரம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சிறையில் பூனை இறைச்சி சாப்பாடு வழங்கப்பட்டதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.


உள்விவகார வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சர் எஸ்.பி. நாவின்னவிற்கு அனுப்பி வைத்துள்ள நீண்ட கடிதமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாவின்ன அண்மையில் திவயின சிங்கள பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பி வைத்துள்ள நீண்ட கடிதத்தில், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து தெவரப்பெரும விளக்கியுள்ளார்.

முறைப்பாட்டாளரான தம்மை ராஜபக்ச அரசாங்கம் 400 நாட்கள் சிறையில் அடைத்து பழிவாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் கிழங்கு கறியில் பானை ஒன்றை இட்டு வேக வைத்து அதனை சோற்றுடன் ராஜபக்ச அரசாங்கம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை வாழ்க்கையை நரகமாக்கும் நோக்கில் இவ்வாறு தமக்கு பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் அதிகார மோகத்தில் செயற்பட்டதில்லை எனவும் கட்சியை காட்டிக் கொடுத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்களை நடத்துவது நியாயத்திற்காக அன்றி அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வேறும் நலன்களுக்காக அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment