July 25, 2016

எனக்காக நீங்கள் பிரசாரம் செய்யுங்கள்! அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்!

கடந்த 2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார்.


மம்தாவின் கோரிக்கைக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பிற தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.

ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்ததது.

அந்த சமயத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருந்தார்.

மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட கலாம் முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு தெரிவிக்க ஒரு விளக்க கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றியும் ஒரு கடிதத்தையும் கலாம் எழுதி வைத்திருந்தார்.

ஆனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை கலாம் எடுத்தார்.

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து கலாம் எழுதிய இரண்டாவது கடிதத்தில் இடம்பெற்றிருந்த விஷயம் அப்போதே பல ஊடகங்களில் வெளியானது.

ஆனால் முதல் கடிதம் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.

அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங்கின் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் எழுதிய இரண்டவது கடிதம் இடம் பெற்றுளளது.

அந்த கடிதத்தில்,

அன்புள்ள இந்தியர்களே ... உங்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எம்.பி.களின் ஆதரவு எனக்கு குறைவாக இருப்பதை அறிந்தும் உள்ளேன்.

பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியடைய போகிறேன் என்றும் தெரிந்தே களமிறங்குகிறேன்.

ஆனால் நான் ஏற்கனவே மக்களின் இதயங்களை வென்றுவிட்டேன், இந்த தேர்தலில் போட்டியிடுவது கடமையாக எனக்குத் தெரிகிறது.

நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனோ அல்லது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கவோ, எதிக்கவோ இல்லை. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னை ஒரு ஆசிரியராக நினைவுக்கூர்தலே எனக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கும்.

நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இப்போது நான் ஒரு வேட்பாளர். வேட்பாளராக கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எனக்கு ஒரு கட்சியின் ஆதரவோ, அல்லது செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவோ இல்லை.

என் அன்புக்குரிய இந்தியர்களே.. எனக்காக நீங்கள் பிரசாரம் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கூட்டு முடிவு. நான் வெற்றியடைந்தாலும் தோல்வியை சந்தித்தாலும் எப்போதும் போல் என் மீது அன்பு காட்டுவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு வேளை நான் தோற்க கூட நேரிடலாம். ஆனால் உங்களிடம் நான் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்.

இது ஒரு அரசியல் அறிக்கையும் அல்ல. தேர்தலுக்கான தாரக மந்திரமும் இல்லை. என்னுடைய இதயத்திலிருந்து வார்த்தைகள் மட்டுமே என அந்த கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment